இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  நிலை நிறுத்தல் (கி. ராஜநாராயணன்) "மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்.” எப்பேர்க் கொத்தி வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேண்ணு உள்ள கெட்டவார்த்தை வசவுகள் இருக்கு புழுத்தநாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால். அதோடு எத்தனையோதயா அவரிட்டெ அடியும் வாங்கி இருக்கான் இந்த மாசாணம் பயல். ஏசுங்க, எம்புட்டு வேனுமானாலும் ஏசுங்க என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான் அவன். - இப்பொ அவன் வாங்கின வசவுக்கு ஒரு காரணமும் கிடையாது. "சுண்ணாம்பு எடுத்துட்டுவாலே மாசாணம்"ண்ணாரு எடுத்துட்டு வந்தான். ஒரு பிஞ்சு சுண்டைக்காய் அளவுதான் வெத்திலையில் வைத்துக் கொண்டாரனும்; மஞ்சாடி கூடீரப்படாது, வசவுதான். சம்மந்தகார முதலாளி வந்திருந்தப்பொ, இவுக முதலாளிகிட்டே சொன்னாரு ஒருநா. "வே மாப்ளே, மாசாணம் இங்கெனதான் நிக்கான் போலுக்கு! செமத்தியா வாங்கலாம் வேலை. சிறுசுலேர்ந்தே நல்.ல பாட்டாளி பாத்துக்கொ. இவங்க சாதியிலேருக்கிற சில்லரைத்தனம் புளுகுணித் தனம் கைநீளுறதெல்லாம் வள்ளிசாக் கிடையாது இவங்கிட்டெ, தப்பிப் பிறந்தவன் பாத்துக்கொ" மாட்டை வச்ச...
  மின்னல் ( கி.ராஜநாராயணன்)  'தள்ளி உட்காரும், அய்யா" "தள்ளி உட்காராமல் இப்பொ என்ன உமது தலையிலா உட்கார்ந்திருக்கிறேன்?" "தள்ளி உட்காரச்சொன்னால் எதுக்கு ஐயா கத்துகிறீர்? இவ்வளவு ரோசம் உள்ளவர் சொந்த பிளஷரில் போகணும்" "ஏன், நீர் சொந்தப் பிளஷரில் போகிறதுதானே?" "உஸ்; அப்பப்பப்பா" "என்ன புழுக்கம்; என்ன வேக்காடு!" "இந்த பஸ் இப்போதைக்கு நகராது." "இந்தப் பிரயாணம் ஜன்மத்துக்கும் போதும் "ஷ்! ராமா, ராகவா என் அப்பனே"   பஸ்ஸின் உள்ளே இருந்தவர்கள் வெந்து மடிந்து கொண்டிருந்தனர். அந்த பஸ்ஸில் நாற்பத்தைந்து பிரயாணிகள் இருந்தனர். நாற்பத்திரண்டு ஆண்கள்; மூன்று கிழவிகள். பஸ் ஸ்டாண்டில் மர நிழல் இருந்தது. பஸ்ஸை நிறுத்துவதற்கென்றே போட்டிருந்த கொட்டகையும் இருந்தது:   அங்கெல்லாம் பஸ்ஸை நிறுத்தியிருக்கலாம். ஆனால் எதற்காக அப்படி நிறுத்தவேண்டும்?   நிறுத்தவேண்டுமென்று என்ன ஆத்திரம்? உட்கார்ந்த பிரயாணிகளில் ஒரு தடியான ஆசாமி, பாவம்! கேஸ் பூஸ் என்று மூச்சு வாங்கி இளைத்துக் கொண்டிருந்தார்; ஆஸ்துமா கார...
  கதவு (கி. ராஜநாராயணன்) கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்”என்று சத்தம் போட்டார்கள். “எந்த ஊருக்கு வேணும்? ஏய் இந்த மாதிரி இடிச்சி தள்ளினா என்ன அர்த்தம்? அப்புறம் நான் விளையாட்டுக்கு வர மாட்டேன்” “இல்லை, இல்லை, இடிச்சி தள்ளலே” “சரி, எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்?” குழந்தைகள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் “திருநெல்வேலிக்கு” என்று சொன்னான். “திருநெல்வேலிக்கு, திருநெல்வேலிக்கு” என்று கூப்பாடு போட்டுச் சொன்னார்கள் எல்லோரும். லட்சுமி ஒரு துணியால் கதவைத் துடைத்துக் கொண்டிருந்தாள். சீனிவாசன் வெறுங்கையால் டிக்கெட் கிழித்துக் கொடுத்து முடிந்ததும், கதவில் பிடித்துத் தொத்திக் கொண்டார்கள். சிலர் கதவை முன்னும் பின்னும் ஆட்டினார்கள். தன் மீது ஏறி நிற்கும் அக்குழந்தைகளை, அந்த பாரமான பெரிய கதவு, பொங்கிப் பூரித்துப் போய் இருக்கும் அக்குழந்தைகளை வேகமாக ஆடி மகிழ்வித்தது. “திருநெல்வேலி வந்தாச்சி” என்றான் ...
  கோமதி (கி. ராஜநாராயணன்) கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. உருவம் ஆணாக இருந்தாலும், இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்குக் குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான்.ஆண்களோடு விளையாடவேண்டியது ஏற்பட்டுவிட்டால் வீடுகட்டி, கல்யாணம் பண்ணி விளையாடும் விளையாட்டில்தான் பிரியம் அதிகம். அதிலும் மணப்பெண்ணாகத் தன்னை வைப்பதென்றால்தான், விளையாட வரச் சம்மதிப்பான். வயசு ஆகஆக அவன் ஆண்களோடு சேர்ந்து பழகுவதையே விட்டுவிட்டான். பெண்கள் இருக்கும் இடங்களில்தான் சதா அவனைப் பார்க்கலாம். ஏதாவது அதிசயமான சங்கதியைக் கேள்விப்பட்டால் பட்டென்று கையைத்தட்டி இடதுகை மணிக் கட்டின் மேல் வலது முழங்கையை ஊன்றி ஆள்காட்டி விரலைக் கொக்கிபோல் வளைத்துத் தன் மூக்கின்மேல்ஒட்டவைத்த...